தலையில் வழுக்கை வருவதற்கு மிக முக்கியமான காரணங்கள் வயது முதிர்வு, பரம்பரை,மற்றும் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் தான்.
ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களில் ஒரு வகையான Dihydro testosterone சுரக்கிறது, இதன் அளவைப் பொறுத்தே முடியின் வளர்ச்சி இருக்கும். அதிகமாக இருந்தால் முடி கொட்டும் மற்றும் சொட்டை ஏற்படும்.
வழுக்கை வராமல் தவிர்க்க, அல்லது ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்ப்பற்றினால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
எலுமிச்சையும் மிளகும்
இதில் எலுமிச்சை விதைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை விதைகள் மற்றும் கடுகு இரண்டு சம அளவு எடுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டு தலைக்குளிக்கலாம். இதனை தலையில் போடுவதால் எரிச்சல் உண்டாகும். அதனால் போட்ட சிறிது நேரத்திலேயே கழுவிவிடாதீர்கள்.
சூடம்
உங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயை தனியாக ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நீங்கள் எடுத்திருக்கும் எண்ணெய் அளவுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று சூடத்தை பொடியாக்கி சேர்த்திடுங்கள்.
ஒரு நாள் முழுவதும் அதனை காற்று புகா வண்ணம் மூடி வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம். குறைந்தது ஒரு நாள் ஒரு நாளவது இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.
No comments:
Post a Comment