Tuesday, October 24, 2017

விராட் கோஹ்லி, அனுஷ்காவிற்கு திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
அவர்கள் பிரிந்துவிட்டனர் என பலமுறை வதந்தி பரவியது கூட உங்களுக்கு நினைவிருக்கும். இந்த நிலையில் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனக்கு விடுப்பு வழங்கும்படி கோலி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விராட்-அனுஷ்கா திருமண திகதி இன்னும் முடிவாகவில்லையாம், அது விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment